நிணநீர்க்குழியப்
புற்றுநோய்
(லிம்போமா)
சிகிச்சையை
மேம்படுத்த
உதவுங்கள்
OLYMPIA மருத்துவ
ஆய்வுகளைப் பற்றி
மேலும் அறிக

நீங்கள் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வை நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கான (லிம்போமா) ஒரு விருப்பத்தேர்வாகக் கருதுகிறீர்களா?

இந்த இணையத்தளம் OLYMPIA மருத்துவ ஆய்வுகள் பற்றிய தகவலை வழங்குகிறது. இந்த ஆய்வுகள் நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) சிகிச்சையில் ஒரு பரிசோதனை செய்யப்படும் மருந்தின் செயல்திறனையும் பாதுகாப்பையும் பரிசோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மருத்துவ ஆய்வுகளுக்கு வெளியே அதைப் பயன்படுத்த இன்னும் அங்கீகரிக்கப்படாததால், ஆய்வு மருந்தானது “பரிசோதனை செய்யப்படும் மருந்து” என்று அழைக்கப்படுகிறது.

சாத்தியமான சிகிச்சைகளை ஆராய்வதற்கு மருத்துவ ஆய்வுகள் அவசியம். நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) உடன் வாழும்பொழுது, ஒரு மருத்துவ ஆய்விற்குக் கடப்பாடின்றி உங்கள் விருப்பப்படியே இருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், இந்த மருத்துவ ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) பற்றிய நமது புரிதலை அதிகரிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றனர், இது எதிர்காலத்தில் இந்த நோய் நிலைமையைக் கொண்டுள்ள மற்றவர்களுக்கு உதவக்கூடும். இன்று இருக்கும் ஒவ்வொரு சிகிச்சையும் முன்பு ஆராய்ச்சி ஆய்வுகளில் பங்கேற்றவர்களால்தான் கிடைத்துள்ளது.

OLYMPIA ஆய்வுகளைப் பற்றி மேலும் அறியவும் அவற்றில் ஒன்று உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவருக்கோ ஒரு விருப்பத்தேர்வாக இருக்குமா என்பதைப் பார்க்கவும்.

B-செல் ஹாட்ஜ்கின் அல்லாத நிணநீர்க்குழியப்
புற்றுநோய் (லிம்போமா) உள்ள பெரியவர்களுக்கு

ta_SGTamil (Singapore)
How valuable was the information provided on our site for you?
😔 😀
Please check if you would like to answer more questions about website user experience