அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) மற்றும் உங்கள் தேர்வுகளைப் பற்றி மேலும் அறிய, ஆலோசனைக் குழுக்கள் முதல் ஆராய்ச்சி ஸ்தாபனங்கள் வரை பல ஆன்லைன் ஆதாரங்கள் உள்ளன. நீங்கள் மேலும் அறிய விரும்பினால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில ஆதாரங்களைப் பார்க்கவும்.
- The Lymphoma Support Network
- Leukemia and Lymphoma Society
- CancerCare
- American Cancer Society
- Lymphoma Research Foundation
- Lymphoma Coalition
- நோயாளிகள் - European Cancer Organisation
- C101 – A Unique Resource for People with Cancer
நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) நோயறிதல் உணர்ச்சி மிகைப்படுவதாக இருக்கலாம் - ஆதரவைக் கண்டுபிடிப்பது முக்கியம். உங்கள் நோயறிதலுடன் தொடர்புடைய மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் கையாள்வது பற்றிய கூடுதல் தகவலை அறிய விரும்பினால், இந்தக் கூடுதல் ஆதாரங்களைப் பார்க்கவும்.
மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு என்பது குறிப்பிட்ட உடல்நலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மனிதத் தன்னார்வலர்களிடம் நடத்தப்படும் அறிவியல் ஆய்வு ஆகும். பரிசோதனைச் சிகிச்சைகள் அல்லது அறியப்பட்ட சிகிச்சைகளைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்பானவையா மற்றும் பயனுள்ளவையா என்பதைத் தலையீட்டு ஆய்வுகள் தீர்மானிக்கின்றன. மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகள், மருத்துவச் சோதனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
OLYMPIA ஆய்வுகள் நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) உள்ளவர்களுக்கான மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகள் ஆகும். OLYMPIA ஆய்வுகள், நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கு (லிம்போமா) ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கு (லிம்போமா) சிகிச்சையளிப்பதில் ஒரு சோதனைக்குரிய மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய முயல்கிறது.
சாத்தியமான சிகிச்சைகளை ஆராய்வதற்கு மருத்துவ ஆய்வுகள் அவசியம். நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) உடன் வாழ்வதால், மருத்துவ ஆய்விற்குப் பொறுப்பேற்காமல் செய்வதற்கென உங்களிடம் போதுமானது இருப்பதாக நீங்கள் உணரலாம். இருப்பினும், இந்த மருத்துவ ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) பற்றிய நமது புரிதலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், இது எதிர்காலத்தில் இந்த நோய்நிலைமையைக் கொண்டுள்ள மற்றவர்களுக்கு உதவக்கூடும். இன்று இருக்கும் ஒவ்வொரு சிகிச்சையும் முன்பு ஆராய்ச்சி ஆய்வுகளில் பங்கேற்றவர்களால்தான் கிடைத்துள்ளது.
நீங்கள் எந்த OLYMPIA ஆய்வில் சேருகிறீர்கள் என்பதன் அடிப்படையில் தகுதி மாறுபடும். நீங்கள் தகுதியுடையவரா என்பதை அறிய OLYMPIA சோதனைகள் பற்றி மேலும் அறிக.
மேலும் அறிக
நீங்கள் ஆய்வில் சேர்ந்தால், நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஆய்வு வருகைகளில் கலந்துகொள்வது மற்றும் சில மதிப்பீடுகள் மற்றும் இமேஜிங் ஸ்கேன், பயாப்ஸிகள் மற்றும் இரத்தம் கொடுப்பது போன்ற செயல்முறைகளுக்கு உட்படுவது இதில் அடங்கும். நீங்கள் பங்கேற்கும் காலத்தின் நீளம், நீங்கள் எந்த OLYMPIA ஆய்வுகளில் பங்கேற்கிறீர்கள் என்பதையும் ஆய்வு மருந்துகளுக்கான உங்கள் பதிலையும் பொறுத்தது.
நீங்கள் பங்கேற்கும் காலத்தின் நீளம், நீங்கள் எந்த ஆய்வில் பங்கேற்கிறீர்கள் மற்றும் ஆய்வு மருந்துக்கான உங்கள் பதில் உள்ளிட்ட பல காரணிகளைச் சார்ந்திருக்கும்.
உங்கள் வழக்கமான கவனிப்புக்கும் மேலாக நடக்கும் கூடுதல் சோதனைகள் மூலம் நீங்கள் பயனடையலாம், மேலும் நீங்கள் நிணநீர்க்குழியப் புற்றுநோய் (லிம்போமா) நிபுணர்களை அணுகலாம். இந்த ஆய்வில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் மருத்துவப் பலனைப் பெறுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உங்கள் நிலை மேம்படலாம், அப்படியே இருக்கலாம் அல்லது மோசமடையவும் செய்யலாம்.
எல்லா மருந்துகளையும் போலவே, ஆய்வு மருந்தை எடுத்துக் கொள்ளும்போது சாத்தியமான அபாயங்கள் உள்ளன. உங்களுக்குத் தகவலறிந்த ஒப்புதல் படிவம் வழங்கப்படும், இது சோதனைக்குரிய ஆய்வு மருந்தை ஆராய்ச்சி செய்யும் பிற மருத்துவ ஆய்வுகளில் காணப்பட்ட ஆபத்துகளை விளக்கும். அறியப்படாத வழிகளில் மருந்து உங்களைப் பாதிக்கலாம். உங்கள் உடல்நிலையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவை தொடர்பில்லாததாகதாக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால்கூட, உங்கள் ஆய்வு மருத்துவர் மற்றும் ஆய்வுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள ஆய்வு மையங்களில் OLYMPIA ஆய்வுகள் நடைபெறுகின்றன. எந்த ஆய்வு மையம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது என்பதை அறிய, OLYMPIA ஆய்வுகள் பற்றி மேலும் அறிக.
மேலும் அறிக
எனக்கு வேறு கேள்விகள் இருந்தால்
நான் என்ன செய்வது?
OLYMPIA ஆய்வுகள் பற்றி உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள தளத்தைத் தொடர்பு கொள்ளவும். எங்கள் சைட் ஃபைண்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி எந்தத் தளம் மிக அருகில் உள்ளது என்பதைக் கண்டறியவும்.
மேலும் அறிக