நிணநீர்க்குழியப்
புற்று (லிம்போமா) நோயாளிகளைக்
கவனிக்கிறீர்களா?

OLYMPIA ஆய்வுகளைக்
கருத்தில் கொள்ளுங்கள்

நிணநீர்க்குழியப்
புற்று (லிம்போமா) நோயாளிகளைக்
கவனிக்கிறீர்களா?

OLYMPIA ஆய்வுகளைக்
கருத்தில் கொள்ளுங்கள்
வரையறுக்கப்பட்ட சிகிச்சைத் தேர்வுகளுடனும் நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கு (லிம்போமா) எந்தச் சிகிச்சையும் இல்லாமலும், OLYMPIA மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகள் தற்போது ஒரு சோதனைக்குரிய மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய நடந்து வருகின்றன. உங்கள் நிணநீர்க்குழியப் புற்று (லிம்போமா) நோயாளிகள் வளர்ந்து வரும் சிகிச்சைகளை அணுகுவதற்கு OLYMPIA ஆய்வுகளை ஒரு வாய்ப்பாக இருக்குமெனக் கருதுங்கள்.
சோதனைக்குரிய சிகிச்சையானது IV உட்செலுத்தலாக வழங்கப்படுகிறது. இது பி-உயிரணு மேற்பரப்பு ஆன்டிஜென் எனப்படும் CD20 மற்றும் டி-உயிரணு ஆன்டிஜென் எனப்படும் CD3 என இருவேறுபட்ட ஆன்டிஜென் உடன் இணையக்கூடிய ஆன்டிபாடி ஆகும். T-செல் ஏற்பியின் CD3 துணைப்பிரிவைப் பிணைப்பதன் மூலம் சைட்டோடாக்ஸிக் T-செல்களுடன் CD20-எக்ஸ்பிரஸிங் செல்களை இணைக்கும் வகையில் இந்தச் சோதனைக்குரிய சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக CD20-இயக்கிய பாலிக்ளோனல் T-செல் அநேகமாகப் புற்றுநோய்க்குரிய B-செல்களைக் கொல்லும்.
எவ்வளவு காலம் பங்கேற்க வேண்டும் என்பது, நோயாளி எந்த ஆய்வில் பங்கேற்கிறார் மற்றும் சிகிச்சையின் மூலம் அவருக்கு கிடைக்கும் பலன் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.

பங்கேற்பாளர்கள் OLYMPIA ஆய்வுகளில் பங்கேற்பது தொடர்பான பயணம் மற்றும் உணவுச் செலவுகள் போன்ற நியாயமான செலவுகளுக்காகப் பணம் திருப்பிச் செலுத்தப்படலாம். சோதனைக்குரிய ஆய்வு மருந்து உட்பட, பங்கேற்பு தொடர்பான மருத்துவப் பராமரிப்பானது எந்தக் கட்டணமும் இன்றி வழங்கப்படும். எவ்வாறாயினும், பங்கேற்பாளர்கள் அல்லது உடல்நலக் காப்பீடு வழங்குநர்கள், கீமோதெரபி போன்ற நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கான (லிம்போமா) வழக்கமான சிகிச்சையாகக் கருதப்படும் மருத்துவச் சிகிச்சைக்கும், ஆய்வின் ஒரு பகுதியாகத் தேவையில்லாத சோதனைகள், மருந்துகள் மற்றும் பொருட்களூக்கும் ஏற்படும் செலவை ஈடுசெய்ய வேண்டியது அவசியமாக இருக்கலாம்.

நீங்கள் எப்படி உதவ முடியும்?

OLYMPIA ஆய்வுகளின் வெற்றியானது, சாத்தியமான ஆய்வுப் பங்கேற்பாளர்களைக் குறிப்பிடும் மருத்துவர்களைப் பொறுத்தது. உங்கள் நோயாளிகள் தகுதியுடையவர்களா என்பதைப் பார்க்க, OLYMPIA ஆய்வுகளைப் பற்றி மேலும் அறியவும்.
உங்கள் நோயாளி அனைத்துச் சேர்த்தல் அளவுகோல்களையும் பூர்த்தி செய்கிறாரா என்பதையும் விலக்குதல் அளவுகோல்கள் எதையும் சந்திக்கவில்லை என்பதையும் பார்க்க, ஆய்வுக் குழு அந்த நோயாளியின் முழு மருத்துவ வரலாற்றையும் சோதித்துப்பார்க்கும். மருத்துவ ஆய்வுகளில் உள்ள பன்முகத்தன்மை சிறந்த சிகிச்சைகளை உருவாக்குவதற்கு முக்கியமானது - OLYMPIA ஆய்வுகள் பற்றி அவர்களிடம் பேசுவதன் மூலம் உங்கள் நோயாளிகள் மருத்துவ ஆராய்ச்சியில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த உதவுங்கள்.
உங்களிடம் தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள நோயாளிகள் இருந்தால், அவர்களுக்குத் தேர்வுகளை வழங்குங்கள், அவர்களுடன் OLYMPIA ஆய்வுகள் பற்றிக் கலந்துரையாடுங்கள்.
உங்கள் நோயாளியின் ஆரோக்கியமும் பாதுகாப்புமே எங்கள் முதன்மையான முன்னுரிமைகள். இந்த ஆராய்ச்சி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நீங்கள் மதிப்பதாக நம்புகிறோம், மேலும் இந்த ஆய்வில் பங்கேற்பதற்கு சாத்தியமுள்ளவர்களை பரிந்துரைப்பது குறித்து பரிசீலிப்பீர்கள். உங்கள் ஆதரவுடன், நிணநீர்க்குழியப் புற்று (லிம்போமா) நோயாளிகளுக்கு உதவுவோம் என்று நம்புகிறோம்.
ta_MYTamil (Malaysia)

இந்தத் தளத்தில் உள்ள தகவல் சுகாதார நிபுணர்களுக்காக மட்டுமே.

நீங்கள் ஒரு சுகாதார நிபுணரா?

How valuable was the information provided on our site for you?
😔 😀
Please check if you would like to answer more questions about website user experience
Skip to content