OLYMPIA-4
மருத்துவ ஆராய்ச்சி
ஆய்வு என்பது என்ன?

உங்களுக்கு B-செல் ஹாட்ஜ்கின் அல்லாத நிணநீர்க்குழியப் புற்றுநோய் (B-செல் நான் ஹாட்ஜ்கின் லிம்போமா, B-NHL) இருப்பது கண்டறியப்பட்டிருந்தால்,உங்கள் மருத்துவப் பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகளவில் பெரும்பாலான ஹாட்ஜ்கின் அல்லாத நிணநீர்க்குழியப் புற்றுநோய்களில் (NHL) பெரும்பான்மையானவை B-செல் நிணநீர்க்குழியப் புற்றுநோய்கள் (B-செல் லிம்போமாக்கள்) ஆகும்.
தற்போது, B-செல் ஹாட்ஜ்கின் அல்லாத நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கான (B-செல் நான் ஹாட்ஜ்கின் லிம்போமா, B-NHL) சாத்தியமான சிகிச்சைகளைத் தயார் செய்து வருகிறோம். OLYMPIA-4 என்பது 3 ஆம் கட்ட மருத்துவ ஆராய்ச்சி ஆய்வாகும், கீமோதெரபி மற்றும் தன்னியக்க ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை (ASCT) உடன் இணைந்து வழங்கப்படும்போது. ஆராய்ச்சி ஆய்வு சிகிச்சையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை தரநிலைப் பராமரிப்பு (SOC) உடன் ஒப்பிட்டு மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைக்காமல் இருக்கும் ("எதற்கும் கட்டுப்படாத" என்றும் அழைக்கப்படுகிறது) நபர்களுக்கானது அல்லது நோய் திரும்பிய ("மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட" என்றும் அழைக்கப்படுகிறது) நபர்களுக்கானது.

இது மருத்துவ ஆய்வுக்கு வெளியே பயன்படுத்த அங்கீகரிக்கப்படாததால், இந்தச் சிகிச்சையானது "ஆராய்ச்சிரீதியான சிகிச்சை" என்று அழைக்கப்படுகிறது.

என்ன ஆய்வு மருந்துகள் வழங்கப்படும்?

ஆய்வின்போது, பங்கேற்பாளர்கள் தோராயமாக 2 சிகிச்சை குழுக்களில் 1இல் நியமிக்கப்படுவார்கள். நீங்கள் தகுதிபெற்று, OLYMPIA-4 இல் பங்கேற்கத் தேர்வுசெய்தால், இரு குழுக்களில் ஒன்றுக்கு ஒதுக்கப்பட உங்களுக்குச் சமமான (50%) வாய்ப்பு உண்டு. ஒரு குழு ஆராய்ச்சிச் சிகிச்சையைப் பெறும், மற்றொன்று நிலையான பராமரிப்பைப் (ASCT ஐத் தொடர்ந்து ஆன்டிபாடி சிகிச்சையுடன் அல்லது ஆன்டிபாடி சிகிச்சை இல்லாமல் கீமோதெரபியைப்) பெறும். இந்த ஆய்வு "ஓப்பன் லேபிள்" ஆகும், அதாவது நீங்கள் எந்தச் சிகிச்சையைப் பெறுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

நான் பங்கேற்றால் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?

ஆய்வில் பங்கேற்பது 100% தன்னார்வமானது (உங்கள் விருப்பம்). நீங்கள் OLYMPIA-4 ஆய்வில் சேர்ந்தால் என்ன எதிர்பார்க்கலாம், அத்துடன் இந்த ஆய்வில் உங்கள் பங்களிப்பையும் பொறுப்புகளையும் பற்றிய தகவலைப் பெறுவீர்கள். உங்கள் வழக்கமான ஆரோக்கியத்தைப் பாதிக்காமல் எந்நேரத்திலும் இந்த ஆய்வில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த ஆய்வில் சேர்ந்தால், நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஆய்வு வருகைகளில் கலந்துகொள்வது மற்றும் இமேஜிங் ஸ்கேன், பயாப்ஸிகள் மற்றும் இரத்தம் எடுப்பது போன்ற சில மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ஆய்வு பங்கேற்பில் தகுதிகாண் சோதனைக் காலம், சிகிச்சைக் கட்டம் மற்றும் தொடர்கண்காணிப்புக் கட்டம் ஆகியவை அடங்கும். தகுதிச்சோதனைக் காலத்தில், நீங்கள் OLYMPIA-4 க்குத் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த பல பரிசோதனைகள் செய்யப்படும். தகுதிச்சோதனைக் காலம் என்பது சிகிச்சைக் காலத்தின் முதல் நாளுக்கு முன்பான 28 நாட்கள் வரை நீடிக்கலாம். நீங்கள் எந்தச் சிகிச்சைக் குழுவில் பங்கேற்கிறார் மற்றும் சிகிச்சைக்கு உங்களுக்குக் கிடைக்கும் பலனைப் பொறுத்து சிகிச்சையின் காலம் வருகைகளின் எண்ணிக்கையுடன் சுமார் 6 மாத காலம் முதல் 1 வருடம் வரையில் நீடிக்கும்.
தொடர்கண்காணிப்புக் காலம் வருடத்திற்கு 6 முறை வருகைகளைக் கொண்டிருக்கும், மேலும் நோய் நிலை மோசமடைதல் அல்லது மீண்டும் வருதல், நீங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுதல் அல்லது ஆய்வு முடிவுறுதல் ஆகிய சூழ்நிலைகளில் இவற்றில் எது முதலில் ஏற்படும் வரை தொடரும்.
இந்த ஆய்வில் உங்கள் பங்கேற்பின் காரணமாக மட்டுமே தேவைப்படும் ஆராய்ச்சிரீதியான சிகிச்சைகள், வருகைகள், பரிசோதனைகள் அல்லது விநியோகப் பொருட்களுக்கு உங்களுக்கு எந்தச் செலவும் இருக்காது.  
இந்த ஆய்வின்போது உங்களுக்கு வழங்கப்படும் ASCT போன்ற சில மருத்துவப் பராமரிப்புகள், நீங்கள் ஆய்வில் இல்லாவிட்டாலும் கூட உங்கள் நோய் நிலைக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் வழக்கமான சிகிச்சையே. SOC உட்பட, இந்த வழக்கமான மருத்துவப் பராமரிப்புக்காக நீங்கள் அல்லது உங்கள் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஆய்விற்குத் தேவைப்படாத மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் பொருட்களுக்கும் நீங்கள் அல்லது உங்கள் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களுடன் இதைப் பற்றி விவாதிக்க உங்கள் ஆய்வு மருத்துவர் மற்றும் ஆய்வுக் குழு உள்ளது. 

நான் வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

எல்லா மருந்துகளையும் போலவே, ஆராய்ச்சிரீதியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்போதும் ஆபத்துகளுக்கு சாத்தியங்கள் உள்ளன. நீங்கள் தகுதிபெற்று, பங்கேற்பதைத் தேர்வுசெய்தால், சாத்தியமான அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகளை விளக்கும் ஒரு தகவலறிந்த ஒப்புதல் படிவம் உங்களுக்கு வழங்கப்படும். அறியப்படாத வழிகளிலும் ஆய்வு மருந்து உங்களைப் பாதிக்கும் சாத்தியம் உள்ளது. உங்கள் உடல்நலமும் பாதுகாப்புமே எங்கள் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் உங்கள் பங்கேற்பு முழுவதும் நீங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவீர்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் மருத்துவப் பலனைப் பெறுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உங்கள் நிலை மேம்படலாம், அப்படியே இருக்கலாம் அல்லது மோசமடையவும் செய்யலாம். நீங்கள் எந்த காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் ஆய்வில் இருந்து விலகலாம்.

உங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்

OLYMPIA-4 பற்றி மேலும் அறியவும், அது உங்களுக்குச் சரியாக இருக்குமா என்பதை அறியவும், உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள ஆய்வுத் தளத்தைத் தொடர்பு கொள்ளவும் - அவர்கள் உதவுவதில் மகிழ்ச்சியடைவார்கள். உங்கள் அருகிலுள்ள ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்.

நான் தகுதி பெறுவேனா?

நீங்கள் OLYMPIA-4 மருத்துவ ஆராய்ச்சி ஆய்வில் பங்கேற்க விரும்பினால், நீங்கள் தகுதியுடையவரா என்பதைப் பார்க்க கீழே உள்ள முன்-தகுதிக்காண் கேள்வித்தாளை நிரப்பவும்.
பின்வருபவற்றைப் பூர்த்தி செய்தால் நீங்கள் இந்த ஆய்விற்குத் தகுதியுடையவராக இருக்கலாம்:
இதில் பங்கேற்க வேறு தேவைகளும் உள்ளன. இந்த ஆய்வில் நீங்கள் சேர முடியுமா என்பதைப் பார்க்க முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். உங்களிடம் வேறு கேள்விகள் இருந்தால், இந்த ஆய்வைப் பற்றி விவாதிக்க உங்கள் மருத்துவரிடம் இந்த இணையதளத்தைப் பகிரவும்.

உங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்

OLYMPIA-4 பற்றி உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்கள் ஆய்வுத்தளம் தேடும் கருவியைப் பயன்படுத்தி உங்களுக்கு மிக அருகில் உள்ள தளத்தைத் தொடர்பு கொள்ளவும்.