நிணநீர்க்குழியப்
புற்று (லிம்போமா)
நோயாளிகளைக் கவனிக்கிறீர்களா?
OLYMPIA ஆய்வுகளைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கருத்தில் கொள்ளுங்கள்
நிணநீர்க்குழியப்
புற்று (லிம்போமா)
நோயாளிகளைக் கவனிக்கிறீர்களா?
OLYMPIA ஆய்வுகளைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கருத்தில் கொள்ளுங்கள்

வரையறுக்கப்பட்ட சிகிச்சை விருப்பத்தேர்வுகளுடனும் நிணநீர்க்குழியப் புற்றுநோயிலிருந்து (லிம்போமா) குணமடையாமலும் இருப்பவர்களில், OLYMPIA மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகள் தற்போது ஒரு பரிசோதனை செய்யப்படும் மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய நடந்து வருகின்றன. உங்கள் நிணநீர்க்குழியப் புற்று (லிம்போமா) நோயாளிகள் புதியதாக வெளியாகும் சிகிச்சைகளை அணுகுவதற்கு OLYMPIA ஆய்வுகள் ஒரு வாய்ப்பாக இருக்கிறதா எனக் கருதுங்கள்.
பரிசோதனை செய்யப்படும் சிகிச்சையானது IV உட்செலுத்தலாக வழங்கப்படுகிறது. இது B-உயிரணு மேற்பரப்பு ஆன்டிஜென் எனப்படும் CD20 மற்றும் T-உயிரணு ஆன்டிஜென் எனப்படும் CD3 என இருவேறுபட்ட ஆன்டிஜென் உடன் இணையக்கூடிய ஆன்டிபாடி ஆகும். T-செல் ஏற்பியின் CD3 துணைப்பிரிவைப் பிணைப்பதன் மூலம் சைட்டோடாக்ஸிக் T-செல்களுடன் CD20-எக்ஸ்பிரஸிங் செல்களை இணைக்கும் வகையில் இந்தச் சோதனைக்குரிய சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக CD20-இயக்குகிற பாலிக்ளோனல் T-செல் அநேகமாகப் புற்றுநோய்க்குரிய B-செல்களைக் கொல்லும்.
எவ்வளவு காலம் பங்கேற்க வேண்டும் என்பது, நோயாளி எந்த ஆய்வில் பங்கேற்கிறார் மற்றும் சிகிச்சையின் மூலம் அவருக்கு கிடைக்கும் பலன் என்பன உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.
பங்கேற்பாளர்கள் OLYMPIA ஆய்வுகளில் பங்கேற்பது தொடர்பான பயணம் மற்றும் உணவுச் செலவுகள் போன்ற நியாயமான செலவுகளுக்காகப் பணம் திருப்பிச் செலுத்தப்படலாம். பரிசோதனை செய்யப்படும் ஆய்வு மருந்து உட்பட, பங்கேற்பு தொடர்பான மருத்துவப் பராமரிப்பானது எந்தக் கட்டணமும் இன்றி வழங்கப்படும். எவ்வாறாயினும், பங்கேற்பாளர்கள் அல்லது உடல்நலக் காப்பீடு வழங்குநர்கள், கீமோதெரபி போன்ற நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கான (லிம்போமா) வழக்கமான சிகிச்சையாகக் கருதப்படும் மருத்துவச் சிகிச்சைக்கும், ஆய்வின் ஒரு பகுதியாக இருக்கத் தேவையில்லாத சோதனைகள், மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு ஏற்படும் செலவையும் ஈடுசெய்ய வேண்டியது அவசியமாக இருக்கலாம்.
நீங்கள் எப்படி உதவ முடியும்?
OLYMPIA ஆய்வுகளின் வெற்றியானது, சாத்தியமான ஆய்வுப் பங்கேற்பாளர்களைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களைப் பொறுத்தது. உங்கள் நோயாளிகள் தகுதியுடையவர்களா என்பதைப் பார்க்க, OLYMPIA ஆய்வுகளைப் பற்றி மேலும் அறியவும்.
B-செல் ஹாட்ஜ்கின் அல்லாத நிணநீர்க்குழியப்
புற்றுநோய் (லிம்போமா) உள்ள பெரியவர்களுக்கு
உங்கள் நோயாளி அனைத்துச் சேர்த்தல் தகுதிநிலைகளையும் பூர்த்தி செய்கிறாரா என்பதையும் விலக்குதல் தகுதிநிலைகள் எதையும் சந்திக்கவில்லை என்பதையும் பார்க்க, ஆய்வுக் குழு அந்த நோயாளியின் முழு மருத்துவ வரலாற்றையும் சோதித்துப் பார்க்கும். மருத்துவ ஆய்வுகளில் உள்ள பன்முகத்தன்மை சிறந்த சிகிச்சைகளை உருவாக்குவதற்கு முக்கியமானது - OLYMPIA ஆய்வுகள் பற்றி அவர்களிடம் பேசுவதன் மூலம் உங்கள் நோயாளிகள் மருத்துவ ஆராய்ச்சியில் பிரதிநிதிக்கப்படுவதை உறுதிப்படுத்த உதவுங்கள்.
உங்களிடம் தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள நோயாளிகள் இருந்தால், அவர்களுக்கு விருப்பத் தேர்வுகளை வழங்கி ஆற்றல் படுத்துங்கள், மேலும் அவர்களுடன் OLYMPIA ஆய்வுகளைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
உங்கள் நோயாளியின் ஆரோக்கியமும் பாதுகாப்புமே எங்கள் முதன்மையான முன்னுரிமைகள். இந்த ஆராய்ச்சி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நீங்கள் மதிப்பதாகவும் இந்த ஆய்வில் பங்கேற்பதற்குச் சாத்தியமுள்ளவர்களைப் பரிந்துரைப்பதைக் குறித்து பரிசீலிப்பீர்கள் என்றும் நம்புகிறோம். உங்கள் ஆதரவுடன், நிணநீர்க்குழியப் புற்று (லிம்போமா) நோயாளிகளுக்கு உதவுவோம் என்று நம்புகிறோம்.