OLYMPIA-5 மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு என்பது என்ன?

உங்களுக்கு நுண்ணறை நிணநீர்த்திசுப் புற்றுநோய் (ஃபோலிகுலர் லிம்போமா, FL) அல்லது விளிம்பு மண்டல நிணநீர்த்திசுப் புற்றுநோய் (மார்ஜினல் ஜோன் லிம்போமா, MZL) நோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தால், உங்கள் மருத்துவப் பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். FL என்பது மேற்கத்திய நாடுகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும் மந்தமான (மெதுவாக வளரும்) ஹாட்ஜ்கின் அல்லாத நிணநீர்த்திசுப் புற்றுநோய் (NHL) ஆகும். MZL என்பது NHL இன் மந்தமான வகை ஆகும்.

தற்போது, FL மற்றும் MZLக்கான சாத்தியமான சிகிச்சைகளைத் தயார் செய்து வருகிறோம். OLYMPIA-5 என்பது 3 ஆம் கட்ட மருத்துவ ஆராய்ச்சி ஆய்வாகும், இது நிலையான பராமரிப்புச் சிகிச்சை (SOC): இம்யூனோமோடூலேட்டரி காரணியுடன் வழங்கப்படும் ஒப்பீட்டுச் சிகிச்சையுடன் ஒப்பிடும்போது நிலையான இம்யூனோமோடூலேட்டரி காரணியுடன் இணைந்து வழங்கப்படும் ஆராய்ச்சி ஆய்வு மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைக்காமல் இருக்கும் ("எதற்கும் கட்டுப்படாத" என்றும் அழைக்கப்படுகிறது) நபர்களுக்கானது அல்லது நோய் திரும்பிய ("மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட" என்றும் அழைக்கப்படுகிறது) நபர்களுக்கானது.

இந்தச் சிகிச்சையானது "ஆராய்ச்சி ரீதியானது" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இந்த மருத்துவ ஆய்வுக்கு வெளியே பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

OLYMPIA-5 ஆய்வில் பங்கேற்பதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதைப் பார்க்க விரும்பினால், கீழே உள்ள தகுதிக்கான முன் தகுதிக்காண் வினாப்பட்டியலை நிரப்பவும்.

இந்த ஆய்வு இரண்டு பகுதிகளாக மேற்கொள்ளப்படும். ஆய்வின் பகுதி 1 அல்லது பகுதி 2 இல் நீங்கள் இடம் பெறுவீர்கள். பகுதி 1க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையில், நீங்கள் ஆராய்ச்சிச் சிகிச்சை மற்றும் இம்யூனோமோடூலேட்டரி காரணி ஆகியவற்றின் கலவையைப் பெறுவீர்கள். பகுதி 2க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையில், ஆராய்ச்சிச் சிகிச்சை மற்றும் இம்யூனோமோடூலேட்டரி காரணி (பிரிவு 1) அல்லது ஒப்பீட்டுச் சிகிச்சை மற்றும் இம்யூனோமோடூலேட்டரி காரணி (பிரிவு 2) ஆகியவற்றின் கலவையைப் பெற நீங்கள் தற்போக்கான முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். நாணயத்தைப் பூவா தலையா எனச் சுண்டிப் பார்ப்பது போன்றே இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற உங்களுக்கு சம வாய்ப்பு (50%) இருக்கும். நீங்கள் எந்த சிகிச்சை குழுவில் பங்கேற்றாலும், அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் லிம்போமாவுக்கு நீங்கள் சிகிச்சை பெறுவீர்கள்.

நான் பங்கேற்றால் நான் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?

ஆய்வில் பங்கேற்பது 100% சுயவிருப்பத்திற்குரியது (உங்கள் விருப்பம்). நீங்கள் OLYMPIA-5 ஆய்வில் சேர்ந்தால் என்ன எதிர்பார்க்கலாம், அத்துடன் இந்த ஆய்வில் உங்களுக்கு இருக்கும் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவலைப் பெறுவீர்கள். அது உங்கள் வழக்கமான ஆரோக்கியத்தைப் பாதிக்காமல் எந்நேரத்திலும் இந்த ஆய்வில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம்.
நீங்கள் இந்த ஆய்வில் சேர்ந்தால், நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஆய்வு வருகைகளில் கலந்துகொள்வது மற்றும் இமேஜிங் ஸ்கேன், பயாப்ஸிகள் மற்றும் இரத்தம் எடுப்பது போன்ற சில மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். இந்த ஆய்வு பங்கேற்பில் தகுதிகாண் சோதனைக் காலம், சிகிச்சைக் கட்டம் மற்றும் தொடர்கண்காணிப்பு கட்டம் ஆகியவை அடங்கும். தகுதிகாண் சோதனைக் காலத்தில், நீங்கள் OLYMPIA-5 க்கு தகுதி உள்ளவரா என்பதை உறுதிப்படுத்த பல பரிசோதனைகள் செய்யப்படும். தகுதிகாண் சோதனைக் காலம் என்பது சிகிச்சைக் காலத்தின் முதல் நாளுக்கு முன்பான 28 நாட்கள் வரை நடைபெறலாம்.
நீங்கள் எந்தச் சிகிச்சைக் குழுவில் பங்கேற்கிறார் மற்றும் சிகிச்சைக்கு உங்களுக்குக் கிடைக்கும் பலனைப் பொறுத்து சிகிச்சையின் காலம் வருகைகளின் எண்ணிக்கையுடன் சுமார் 1 வருடம் நீடிக்கும். சிகிச்சையின் முடிவில் சுமார் 90 நாட்கள் வரை ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 3 வருகைகள் அடங்கும் தொடர்கண்காணிப்பு காலம் இருக்கும். பிறகு, ஒவ்வொரு 12 வாரங்களுக்கும் நீங்கள் தொடர்கண்காணிப்பு வருகைகளைத் தொடர்வீர்கள், இது உங்கள் நிலை மோசமடையும் வரை அல்லது மீண்டும் நிகழும் வரை, நீங்கள் உங்கள் சம்மதத்தைத் திரும்பப் பெறும் வரை, உங்களைத் தொடர்பு கொள்ள முடியாத வரை அல்லது ஆய்வு முடியும் வரை, இவற்றில் எது சீக்கிரமோ அது வரை தொடரும். 
உங்களுக்கு, ஆய்வு மருந்து, ஆய்வு மருத்துவரின் நேரம் அல்லது ஆய்வு தொடர்பான நடைமுறைகள் மற்றும் வழங்கல்களுக்காக எந்த செலவும் இருக்காது. இந்தச் செலவுகளை நிதி ஆதரவாளர் ஏற்றுக்கொள்வார். நீங்கள் ஆய்வில் இல்லாவிட்டாலும், நீங்கள் அல்லது உங்கள் உடல்நலக் காப்பீட்டு நிறுவனம் உங்கள் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் உங்கள் மருத்துவ கவனிப்புக்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இல்லாத மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் பொருட்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களுடன் இதைப் பற்றி விவாதிக்க உங்கள் ஆய்வு மருத்துவர் மற்றும் ஆய்வுக் குழு உள்ளது.

How can I take part?Changed

நீங்கள் OLYMPIA-5 இல் பங்கேற்க விரும்பினால், நீங்கள் தகுதியுடையவரா என்பதைப் பார்க்க, இந்தச் சுருக்கமான முன்-தகுதிக்காண் வினாப்பட்டியலை நிரப்பவும்.

நான் வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

எல்லா மருந்துகளையும் போலவே, ஆராய்ச்சிரீதியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்போதும் ஆபத்துகளுக்கு சாத்தியங்கள் உள்ளன. நீங்கள் தகுதிபெற்று, பங்கேற்பதைத் தேர்வுசெய்தால், சாத்தியமான அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகளை விளக்கும் ஒரு தகவலளிக்கப்பட்ட ஒப்புதல் படிவம் உங்களுக்கு வழங்கப்படும். அறியப்படாத வழிகளிலும் ஆய்வு மருந்து உங்களைப் பாதிக்கும் சாத்தியம் உள்ளது. உங்கள் உடல்நலமும் பாதுகாப்புமே எங்கள் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் உங்கள் பங்கேற்பு முழுவதும் நீங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவீர்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் மருத்துவப் பலனைப் பெறுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உங்கள் நிலை மேம்படலாம், அப்படியே இருக்கலாம் அல்லது மோசமடையவும் செய்யலாம். நீங்கள் எந்த காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் ஆய்வில் இருந்து விலகலாம்.

உங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்

OLYMPIA-5 பற்றி மேலும் அறியவும், அது உங்களுக்குச் சரியாக இருக்குமா என்பதை அறியவும், உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள ஆய்வுத் தளத்தைத் தொடர்பு கொள்ளவும் - அவர்கள் உதவுவதில் மகிழ்ச்சியடைவார்கள். உங்கள் அருகிலுள்ள ஆய்வு தளத்தைக் கண்டறியவும்.

நான் தகுதி பெறுவேனா?

பின்வருபவற்றைப் பூர்த்தி செய்தால் நீங்கள் இந்த ஆய்விற்குத் தகுதியுடையவராக இருக்கலாம்:

இதில் பங்கேற்க வேறு தேவைகளும் உள்ளன. இந்த ஆய்வில் நீங்கள் சேர முடியுமா என்பதைப் பார்க்க முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். உங்களிடம் வேறு கேள்விகள் இருந்தால், இந்த ஆய்வைப் பற்றி விவாதிக்க உங்கள் மருத்துவரிடம் இந்த இணையதளத்தைப் பகிரவும்.

உங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்

OLYMPIA-5 பற்றி உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்கள் ஆய்வுத்தளத்தைத் தேடும் கருவியைப் பயன்படுத்தி உங்களுக்கு மிக அருகில் உள்ள தளத்தைத் தொடர்பு கொள்ளவும்.