OLYMPIA-3 மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு என்பது என்ன?

உங்களுக்கு உட்பரவும் பெரிய B-செல் நிணநீர்க்குழியப் புற்றுநோய் (டிஃபியூஸ் லார்ஜ் B-செல் லிம்போமா, DLBCL) இருப்பது கண்டறியப்பட்டிருந்தால், உங்கள் மருத்துவப் பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளவும். உட்பரவும் பெரிய B-செல் நிணநீர்க்குழியப் புற்றுநோய் (DLBCL) என்பது ஹாட்ஜ்கின் அல்லாத நிணநீர்க்குழியப் புற்றுநோயின் மிகவும் பொதுவான துணை வகை ஆகும், புதிதாக கண்டறியப்பட்ட அனைத்து நிகழ்வுகளில் மூன்றில் ஒருவருக்கு (1/3) இந்த வகை இருக்கிறது.  
தற்போது, உட்பரவும் பெரிய B-செல் நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கான (DLBCL க்கான) சாத்தியமான சிகிச்சைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். OLYMPIA-3 என்பது 3 ஆம் கட்ட மருத்துவ ஆராய்ச்சி ஆய்வாகும், இது கீமோதெரபி உடன் இணைந்த நிலையான பராமரிப்பு (SOC) சிகிச்சையுடன் ஒப்பிடும்போது கீமோதெரபியுடன் இணைந்து வழங்கப்படும் ஆராய்ச்சி ஆய்வுச் சிகிச்சையின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
DLBCL சிகிச்சைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாததால் இந்த ஆய்வு சிகிச்சையானது "ஆராய்ச்சிரீதியானது" என்று அழைக்கப்படுகிறது.

OLYMPIA-3 ஆய்வில் பங்கேற்பதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதைப் பார்க்க விரும்பினால், கீழே உள்ள தகுதிக்கான முன் தகுதிக்காண் வினாப்பட்டியலை நிரப்பவும்.

என்ன ஆய்வு மருந்துகள் வழங்கப்படும்?

இந்த ஆய்வு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில், குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் CHOP உடன் சேர்த்து ஆராய்ச்சி ஆய்வு சிகிச்சையைப் பெறுவார்கள். அது முடிந்ததும், இரண்டாம் பகுதி தொடங்குகிறது.
ஆய்வின் இரண்டாம் பகுதியில், ஆய்வின் பகுதி 2 இல் 2 சிகிச்சைக் குழுக்களில் 1 க்கு நோயாளிகள் தற்போக்காக ஒதுக்கப்படுகிறார்கள். நாணயத்தைப் பூவா தலையா எனச் சுண்டிப் பார்ப்பது போன்றே இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற உங்களுக்கு சம வாய்ப்பு (50%) இருக்கும். நீங்கள் எந்த சிகிச்சை குழுவில் பங்கேற்றாலும், அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் நிணநீர்க்குழியப் புற்றுநோய்க்கு நீங்கள் சிகிச்சை பெறுவீர்கள். நீங்கள் எந்த சிகிச்சையைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்கும் உங்கள் மருத்துவருக்கும் தெரியும்.

நான் பங்கேற்றால் நான் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?

ஆய்வில் பங்கேற்பது 100% தன்விருப்பமானது (உங்கள் தெரிவு). நீங்கள் OLYMPIA-3 ஆய்வில் சேர்ந்தால் என்ன எதிர்பார்க்கலாம், அத்துடன் இந்த ஆய்வில் உங்களுக்கு இருக்கும் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவலைப் பெறுவீர்கள். அது உங்கள் வழக்கமான ஆரோக்கியத்தைப் பாதிக்காமல் எந்நேரத்திலும் இந்த ஆய்வில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த ஆய்வில் சேர்ந்தால், நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஆய்வு வருகைகளில் கலந்துகொள்வது மற்றும் இமேஜிங் ஸ்கேன், பயாப்ஸிகள் மற்றும் இரத்தம் எடுப்பது போன்ற சில மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ஆய்வு பங்கேற்பில் தகுதிகாண் சோதனைக் காலம், சிகிச்சைக் கட்டம் மற்றும் தொடர்கண்காணிப்புக் கட்டம் ஆகியவை அடங்கும். தகுதிகாண் சோதனைக் காலத்தில், நீங்கள் OLYMPIA-3 க்கு தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த பல பரிசோதனைகள் செய்யப்படும். தகுதிகாண் சோதனைக் காலம் என்பது சிகிச்சைக் காலத்தின் முதல் நாளுக்கு முன்பான 28 நாட்கள் வரை நடைபெறலாம். நீங்கள் எந்த சிகிச்சை குழுவில் பங்கேற்கிறீர்கள் என்பதையும் சிகிச்சை உங்களுக்கு எந்தளவு பலனளிக்கிறது என்பதையும் பொறுத்து சுமாராக 12-20 வருகைகளுடன் சுமார் 6 மாதங்களுக்கு சிகிச்சைக் கட்டம் நீடிக்கும். தொடர்கண்காணிப்பு காலமானது, நோய் நிலை மோசமடைதல், நீங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுதல் அல்லது ஆய்வு நிறுத்தப்படுத்தல் ஆகிய சூழ்நிலைகளில் இவற்றில் எது முதலில் ஏற்பட்டாலும் வருகைகள் வருடத்திற்கு 6 முறை இருக்கும்.
ஆய்வு மருந்து, ஆய்வு மருத்துவரின் நேரம் அல்லது நடைமுறைகள் மற்றும் ஆய்வு தொடர்பான வழங்கல்களுக்காக உங்களுக்கு, எந்த செலவும் இருக்காது. இந்தச் செலவுகளை நிதிஆதரவாளர் ஏற்றுக்கொள்வார். நீங்கள் ஆய்வில் இல்லாவிட்டால், நீங்கள் அல்லது உங்கள் உடல்நலக் காப்பீட்டு நிறுவனம் உங்கள் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் உங்கள் மருத்துவ கவனிப்புக்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இல்லாத மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் பொருட்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களுடன் இதைப் பற்றி விவாதிக்க உங்கள் ஆய்வு மருத்துவர் மற்றும் ஆய்வுக் குழு உள்ளது. 

நான் வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

எல்லா மருந்துகளையும் போலவே, ஆராய்ச்சிரீதியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்போதும் ஆபத்துகளுக்குச் சாத்தியங்கள் உள்ளன. நீங்கள் தகுதிபெற்று, பங்கேற்பதைத் தேர்வுசெய்தால், சாத்தியமான அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகளை விளக்கும் ஒரு தகவலறிந்த ஒப்புதல் படிவம் உங்களுக்கு வழங்கப்படும். அறியப்படாத வழிகளிலும் ஆய்வு மருந்து உங்களைப் பாதிக்கும் சாத்தியம் உள்ளது. உங்கள் உடல்நலமும் பாதுகாப்புமே எங்கள் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் உங்கள் பங்கேற்பு முழுவதிலும் நீங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவீர்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் மருத்துவப் பலனைப் பெறுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உங்கள் நிலை மேம்படலாம், அப்படியே இருக்கலாம் அல்லது மோசமடையவும் செய்யலாம். நீங்கள் எந்தக் காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் ஆய்வில் இருந்து விலகலாம்.

உங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்

OLYMPIA-3 பற்றி மேலும் அறியவும், அது உங்களுக்குச் சரியாக இருக்குமா என்பதை அறியவும், உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள ஆய்வுத் தளத்தைத் தொடர்பு கொள்ளவும் - அவர்கள் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைவார்கள். உங்கள் அருகிலுள்ள ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும். 

நான் தகுதி பெறுவேனா?

நான் தகுதி பெறுவேனா?

பின்வருபவற்றைப் பூர்த்தி செய்தால் நீங்கள் இந்த ஆய்விற்கு தகுதியுடையவராக இருக்கலாம்:
பின்வருபவற்றைப் பூர்த்தி செய்தால் நீங்கள் இந்த ஆய்விற்கு தகுதியுடையவராக இருக்கலாம்:
இதில் பங்கேற்க வேறு தேவைகளும் உள்ளன. இந்த ஆய்வில் நீங்கள் பங்கேற்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். உங்களுக்கு வேறு கேள்விகள் இருந்தால், இந்த வலைத்தளத்தை உங்கள் மருத்துவரிடம் பகிர்ந்து விவாதிக்கவும்.

உங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்

உங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆய்வுத் தளத்தைக் கண்டறியவும்

OLYMPIA-3 பற்றி உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்கள் ஆய்வுத்தளத்தைத் தேடும் கருவியைப் பயன்படுத்தி உங்களுக்கு மிக அருகில் உள்ள தளத்தைத் தொடர்பு கொள்ளவும்.